யாழ் மாவட்டத்தில் 25 வீதமானவர்களுக்கு நீரிழிவு நோய் – யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் அதிர்ச்சித் தகவல்!

Sunday, April 16th, 2023

யாழ்ப்பாண மாவட்டத்தில் 25 வீதமானவர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் இ.மைக்கல் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்ற பாரம்பரிய உணவு கண்காட்சியில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணி க்கை வருடா வருடம் அதிகரித்து செல்வதாக இ.மைக்கல் தெரிவித்துள்ளார்.

மேற்கத்தைய உணவு முறைகள், வெதுப்பக உணவுகள், மற்றும் அதிகளவு மாப்பொருட்களை கொண்ட உணவு முறைகள் காரணமாகவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  அதிகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..

எமது முன்னோர்கள் பாரம்பரிய உணவுகளை உட்கொண்டதாலேயே நீரிழிவு போன்ற நோய்களிலிருந்து தப்பித்துக்கொண்டதாகவும் யாழ். நீரிழிவு கழகத்தின் கழகத்தின் தலைவர் இ.மைக்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:


டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு எச்சரிக்கை!
உறுதி செய்யப்பட்ட 8 இலட்சம் பயனாளிகளுக்கான, ஜூலை மாதத்த கொடுப்பனவு இன்றுமுதல் வங்கிக் கணக்குகளில் வர...
ஜனாதிபதி ரணில் - சவுதி அரேபிய அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம் சந்திப்பு - பொருளாதார உறவுகளை மேலும் வல...