புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் மிகவும் ஆபத்தானது – முன்னிலை சோசலிச கட்சியின் பேச்சாளர்!

Friday, October 26th, 2018

இலங்கையில் கொண்டுவரப்பட்ட 1979ம் ஆண்டு 48ம் இலக்க பயங்கரவாதத் தடைச்சட்டம்  தற்போது புதிகாக கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம்  நீதிக்கு எதிரானது என முன்னிலை சோசலிச கட்சியின் பேச்சாளர் புபுது ஜெயகொட தெரிவித்துள்ளார்.

கடந்த 23-10-2018 அன்று சமூக மற்றும் சமய மத்திய நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இது குறித்து கருத்துத் தெரிவித்த புபுது ஜெயகொட நாட்டில் பயங்கரமவாத செயற்பாடுகளுக்கு எதிராக பயங்கரவாதத்துடன் இணைந்த செயற்பாடுகளை தடுப்பதங்காகவுமே பயங்கரவாதத தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. இத் தடைச்சட்டம் நாட்டு மக்களின் நலனை பாதிக்கும் வகையில் அமையும் அடக்கு முறைச்சட்டங்களை தவிர்ப்பதற்கு ஒன்றிணைந்து குரல் கொடுப்பதற்காக இடதுசாரி கட்சிகள் மற்றும் அமைப்புக்களை உள்ளடக்கிய வகையில் தாம்ங்கள் செயற்பட உள்ளதாக தெரிவித்தார். அது;துடன் தற்போது புதிதாக கொண்டுவரப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச்சட்டம் பழைய பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விட ஆபத்தானது நீதிக்கு எதிரானது என்று குறிப்பிட்டுள்ளார்.

Related posts: