காவல்துறைக்கு எதிராக 1216 முறைப்பாடுகள்!

Saturday, August 6th, 2016

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் பொலிஸார் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை குறித்து 1216 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்காது அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிடம் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடுகளில் 355 முறைப்பாடுகளுக்கு தீர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஆணைக்கழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவிற்கு கிடைக்கும் முறைப்பாடுகளில் 70 வீதமான முறைப்பாடுகள் அதிகார துஸ்பிரயோகம் தொடர்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடவடிக்கை எடுப்பது குறித்து பொலிஸ் மா அதிபருக்கு பரிந்துரை வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: