உயர்தர பரிட்சை முடியும் வரை தொடர்ச்சியாக மின்சாரம் இன்றேல் சட்ட நடவடிக்கை – மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு பொதுப் பயன்பாடுகள் அறிவிப்பு!

Friday, January 27th, 2023

கடந்த ஜனவரி 25 ஆம் திகதி மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் எட்டப்பட்ட உடன்பாட்டின் பிரகாரம், க.பொ.த. உயர் தரப் பரீட்சை இடம்பெறும் காலப் பகுதியில் திட்டமிட்ட எந்தவொரு மின்வெட்டுக்கும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளிக்காது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பிய கடிதத்திலேயே அவ்வாணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 2023 ஜனவரி 26 முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான குறித்த காலப்பகுதியில் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குமாறும், மின்சாரத்தை வழங்குவதற்கு அனுமதி பெற்றுள்ள இலங்கை மின்சார சபைக்கு கடந்த ஜனவரி 26 ஆம் திகதி அறிவித்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இலங்கை மின்சார சபை மேற்கூறிய கட்டளைக்கு இணங்கத் தவறினால், இலங்கை மின்சாரச் சபைக்கு வழங்கப்பட்டுள்ள, EL/T/09-002 எனும் அனுமதிப்பத்திரத்தின் 30(10) பிரிவை மீறுவதாகக் கருதி, 2009 ஆம் ஆண்டின் 20 இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் (திருத்தப்பட்டது) 48ஆவது பிரிவின் கீழ் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவிப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

மாணவனை மதுபானம் அருந்த வைத்து துஷ்பிரயோகத்திற்க உட்படுத்த முயன்ற சந்தேகநபர்களுக்கு நிபந்தனைப் பிணை!
கூவில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
மன்னார் வளைகுடாவில் ஒரு இலட்சம் கோடி கன அடியிலும் அதிக எரிவாயு - கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு...