புதிய தேர்தல் சட்டம்:  அரச பணியாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது  – கூட்டு எதிர்கட்சி!

Saturday, August 26th, 2017

அரசாங்கம் நிறைவேற்றிய உள்ளுராட்சி மன்றத்திற்கான புதிய தேர்தல் சட்டத்தின் மூலம் அரச பணியாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கூட்டு எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஸ் குணவர்தன, டளஸ் அழகப்பெரும, விமல் வீரவன்ச மற்றும் வாசுதேவ நாணயகார ஆகியோர் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தனர்

இதேவேளை, மருத்துவபீட மாணவ ஒன்றிய செயற்பாட்டு குழுவின் இணைப்பாளர் ரயன் ஜயலத் எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுகொள்ளுப்பிட்டி காவற்துறையினர் அவர் மீது தொடுத்துள்ள வழக்கு விசாரணை இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சுகாதார அமைச்சினுள் பலவந்தமாக உள்நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் விசாரணைகளுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின்போது ரயன் ஜயலத் நீதிமன்றில் முன்னிலையாகாமை காரணத்தினால் அவரை எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts: