புதிய அரசியல் சீர்திரத்த யாப்பில் அரசியல் அமைப்பு நீதிமன்றம்?
Thursday, December 15th, 2016
அரசியலமைப்பு விவகாரங்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் புதிய அரசியல் அமைப்பில் அரசியல் அமைப்பு நீதிமன்றமொன்றும் உருவாக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பு தொடர்பிலான துணைக்குழுவினால் இது தொடர்பில் பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்றிற்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் அரசியல் அமைப்பு பற்றி நிபுணத்துவ அறிவு கொண்ட சிரேஸ்ட சட்டத்தரணிகள் உள்ளடக்கப்பட உள்ளனர்.
அரசியலமைப்புப் பேரவையின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதியினால் இந்த நீதிமன்றிற்கான நீதிபதிகள் நியமிக்கப்பட உள்ளனர். நாட்டில் அரசியல் அமைப்பு பற்றி ஏதேனும் வழக்குத் தொடரப்பட்டால் அது அரசியல் அமைப்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
முக்கிய ஆறு அதிகாரங்கள் இந்த அரசியல் அமைப்பு நீதிமன்றிற்கு வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் சட்டமூலமொன்று குறித்து சட்ட விளக்கம் பெற்றுக்கொள்ளவும் இந்த அரசியல் அமைப்பு நீதிமன்றிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


