டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சகல மக்களின் பங்களிப்பும் அவசியம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறுகிறார்!

Thursday, May 25th, 2017

வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைத் தடுப்பதற்கு நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் பங்களிப்பும் அவசியம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்தவை,

எதிர்வரும் ஜீன் மாதம் 1ஆம் திகதியிலிருந்து 3 மாத காலப்பகுதிக்குள் டெங்கு நோயை ஒழிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த வேலைத்திட்டத்திற்கு அனைவரும் பங்களிப்பு வழங்க வேண்டும்.

டெங்கு நுளம்பு பெருகும் இடங்களைத் துப்பரவு செய்வதன் மூலம் இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பு வழங்க முடியும். தமது வீட்டு சுற்றாடலை சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். ஏற்படக்கூடிய எத்தகைய காய்ச்சலும் டெங்கு நோயாக இருக்கக்கூடும் என்ற நிலைப்பாட்டுடன் அனைவரும் பரிசோதனைகளை மேற்கொண்டு வைத்திய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

காய்ச்சல் ஏற்படுமிடத்து வைத்திய ஆலோசனையின்றி பரசிற்றமோல்ட் தவிர்ந்த வேறு எந்த உடம்பு வலிக்கான மாத்திரைகளைப் பயன்படுத்தக்கூடாது. சில மாத்திரைகள் டெங்கு நோயாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை – என்றார்.

Related posts: