புகையிலை செய்கை தடை செய்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் – கமக்கார அமைப்புகளின் தலைவர்!

Wednesday, July 25th, 2018

யாழ் மாவட்டத்தில் புகையிலை பயிரிடத் தடை விதிப்பதாயின் இப்பயிர்ச் செய்கையை வாழ்வாதாரமாக நம்பியிருக்கின்ற மக்களுக்கு மாற்று வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் யாழ் மாவட்ட கமக்கார அமைப்புகளின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாழ்வாதாரப் பயிராகவே புகையிலை காணப்படுகின்றது. ஆனால் தற்போது அந்தப் பயிரைத் தடை செய்வது குறித்து பேசப்படுகின்றது. மாவட்டத்தில் 20 வீதமான நிலப்பரப்பில் புகையிலைச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வாறான நிலையில் புகையிலையை தடை செய்வதனால் பெருமளவான மக்கள் பாதிக்கப்படுகின்ற அபாயம் காணப்படுகின்றது.

புகையிலையை வாழ்வாதாரமாகக் கொண்ட மக்களுக்கு இதுவரையில் மாற்றுப் பயிர் குறித்தோ அல்லது மாற்று வழிகள் குறித்தோ உறுதியான எந்தவித தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை.

இவ்வாறிருக்கையில் இதனை திடீரென தடை செய்தால் இதனை நம்பியிருக்கின்ற மக்களின் வாழ்வாதாரம் என்னவாகுமென்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

Related posts: