நியூயோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி ரணில் – நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது தொடர்பில் உரை!

Sunday, September 17th, 2023

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அமெரிக்கா நியூயோர்கை சென்றடைந்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிலிருந்து இன்று அதிகாலை அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா சென்றுள்ளார்.

ஜி 77 மற்றும் சீன அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கடந்த புதன்கிழமை கியூபா ஹவானா நகரை சென்றடைந்தார்.

இந்தநிலையில், கியூபா விஜயத்தை நிறைவு செய்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியூயோக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை ஜனாதிபதி செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் தனது விசேடஉரையை ஆற்ற உள்ளார்.

இம்முறை கூட்டத்தொடர் ஆனது நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.

மேலும் கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: