புகையிரத சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம்!
Friday, May 14th, 2021
புகையிரத சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்கள பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரட்ன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் அனைத்து புகையிரத சேவைகளும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.
நாடு தழுவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இவ்வாறு புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இதன்படி இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் எந்தவொரு புகையிரதமும் சேவையில் ஈடுபடுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரு கட்சியின் ஆணிவேராக இருப்பது வட்டார செயற்குழுக்களே - ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிரவாக செய...
திங்கட்கிழமை முதல் புதிய வேலை நேர மாற்றத்திற்கான சுற்றுநிரூபம்!
11 சிறிய குளங்களை ஒன்றாக்கி 700 மெகாவாட்ஸ் மின்சாரம் பெறும் திட்டத்துக்கு கிளிநொச்சியில் அனுமதி!
|
|
|


