பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் திடீர் பரிசோதனை நடவடிக்கை – எரிவாயு விநியோகம் தொடர்பான அறிவுறுத்தல் பலகை காட்சிப்படுத்தப்பட வேண்டு எனவும் அறிவுறுத்து!
Wednesday, March 23rd, 2022
அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு அமைவாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களால் மாவட்ட இணைப்பதிகாரியின் தலைமையில் இன்று (2022.03.23) திடீர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அதனடிப்படையில் Litro, Laugh முகவர்களினை சந்தித்துசில அறிவுறுத்தல்களை விடுத்துள்ளனர்.
அதனடிப்படையில் எரிவாயு விநியோகத்தில் விநியோகத்தின் விபரங்களை அதிகார சபையினால் வழங்கப்பட்ட படிவத்தினை நிரப்புவதன் மூலம் பெறவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதேச ரீதியாக தங்களிடம் இருப்பிலுள்ள எரிவாயுக்களை பிரித்து முகவர்களே பங்கீட்டு அட்டை முறையில் வழங்குதல் வேண்டும் என்றும் இயன்றவரை வியாபார நிலையங்களுக்கு இருப்பிலுள்ள 1/3 பகுதியையேனும் வழங்க முன்வர வேண்டும் எனவும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் விநியோக இடத்தில் விநியோகிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேநேரம் எரிவாயு விநியோகம் தொடர்பான அறிவுறுத்தல் பலகை காட்சிப்படுத்தப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.
மேலும், யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் பரிசோதிக்கப்பட்டதுடன், முறைகேடான வியாபார நிலையங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் எரிபொருள் நிலையங்கள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்புக்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


