பாரிய எதிர்ப்பு நடவடிக்கைக்கு தயாராகும் இலங்கை ஆசிரியர் சங்கம்!

நாட்டிலுள்ள அனைத்து ஆசிரிய உதவியாளர்களும் இம்மாதம் 5ஆம் திகதி பாரிய எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேற்குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமானது கொழும்பில் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆசிரிய உதவியாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவொரு சலுகைகளும் அரசாங்கத்தினால் இதுவரை வழங்கப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உலக ஆசிரியர் தினத்தில் அந்த சலுகைகளை பெற்றுத் தருமாறு கோரி, எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
இலங்கையருக்கு அகதி அந்தஸ்து பறிபோகும் நிலை!
ஹெய்ட்டி நிலநடுக்கத்தில் 300 இக்கும் அதிகமானோர் பலி: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மஹிந்தராஜபக்ச இரங்க...
2020 / 2021 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் ஜனவரி முதல் இணைத்துக் கொள்ளப்படுவர் - பல்கலைக்கழக மானிய...
|
|