பாடசாலை செல்லாத சிறுவரைத் தேடும் நெல்லியடி பொலிஸ்!

பாடசாலை செல்லாத சிறுவர்களை இனங்கண்டு அவர்களைப் பாடசாலைக்கு அனுப்புமாறு பெற்றொருக்கு அறிவுறுத்தும் செயற்றிட்டம் நெல்லியடிப் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டது.
கரவெட்டி பிரதேச செயலக சமூகசேவைப் பகுதியின் ஆதரவுடன் இந்தச்செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர். குறிப்பாக துன்னாலைப்பகுதி, அதனை அண்டியப்பகுதிகளில் இந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாகப் பொலிஸார் கூறினர். சில சிறுவர்கள் தமது குடும்ப நிலையைப்போக்க வேலைக்குச் செல்வதாக கிடைத்த தகவலை அடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. சிறுவர்கள் பாடசாலை செல்லாத பட்சத்தில் இனிவரும் காலங்களில் பெற்றோர் மீ:து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என் பொலிஸார் தொவிவத்துள்ளனர்.
Related posts:
இலங்கை பெட்மிண்டன் சங்கத்தின் பதிவு இரத்து!
இடையூறு செய்தோர் மீது பாய்கிறது சட்டம்!
மின்சார சபை ஊழியர்கள் சுகயீன விடுமுறை!
|
|