இடையூறு செய்தோர் மீது பாய்கிறது சட்டம்!

Friday, August 3rd, 2018

நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் மன்று கட்டளையிட்டது.

மாத்தளன் கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டனர் என்று தெரிவித்து மீனவர்களது 4 கூலர் வாகனங்கள் சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம் இரவு பிடிக்கப்பட்டன. நீரியல்வளத் திணைக்களத்திடம் மீன்களுடன் கூலர் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன. உள்ளுர் மீனவர்கள் நீரியல் வளத் திணைக்களத்தின் முன்பாகத் திரண்டனர். அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

நீரியல் வளத் திணைக்களத்தினர் நேற்று முன்தினம் இரவே மீனவர்களை நீதிவானின் இல்லத்தில் முற்படுத்தினார்கள். மீனவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர். சான்றுப் பொருள்கள் தொடர்பான விளக்கம் நேற்று மன்றில் இடம்பெற்றது. மாத்தளன் மீனவர்கள் சார்பாக சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் மன்றில் முன்னலையானார்.

மீன்கள் சட்டவிரோதமாக பிடிக்கப்படவில்லை. டைனமெட்டை பயன்படுத்தி மீன்களை பிடித்திருந்தால் மீன்கள் மூச்சுத்திணறியே இறந்திருக்கும். மீன்களின் கண்கள் வெளியே வந்திருக்கும். குருதி வெளியேறியிருக்கும். இது நீரியல் வளத் திணைக்களத்தினருக்கும் தெரியும் என்று சட்டத்தரணி மன்றுக்கு எடுத்துரைத்தார். சுருக்கு வலைத் தொழிலைச் செய்யக்கூடாதென்று ஊர்மக்கள் சிலர் மேற்கொண்ட பழிவாங்கல் நடவடிக்கையே இது என்றும் சட்டத்தரணி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் நேற்று முன்தினம் இரவு உள்ளுர் அரசியல்வாதி உட்பட சிலர் நீரியல்வளத் திணைக்களத்திற்குள் புகுந்து பணியாளர்களுடன் முரண்பட்டனர். அவர்கள் மதுபோதையில் இருந்தனர் என்றும் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டது. இந்த விடயத்தை வினவிய மன்று அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுத்தது. மன்றில் பாரபப்படுத்தப்பட்ட மீன்களின் மாதிரி அரச இரசாயன பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எஞ்சிய மீன்கள் மீனவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. வழக்கு எதிர்வரும் ஐப்பசி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts:

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்கான இந்திய - இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அங்குரார்ப்பணம்!
வடக்கில் நெல் கொள்வனவுக்காக மேலும் 25 மில்லியன் நிதி பகிர்ந்தளிப்பு – வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிரு...
தனியான அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக செயற்படும் தொழிற்சங்கங்களின் குழுவொன்று ஆசிரியர்களை கட்டுப்படுத்...