பாடசாலை செல்லாதோர் சிறுவர் இல்லத்தில் சேர்ப்பு!
 Monday, February 6th, 2017
        
                    Monday, February 6th, 2017
            கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் பாடசாலைகளுக்குச் செல்லாத மற்றும் இடைவிலகிய 7 சிறுவர்கள் கிளிநொச்சி நீதிவான் மன்றின் உத்தரவுக்குமைய சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கண்டாவளை, புன்னைநீராவி ஆகிய பகுதிகளில் சிறுவன் நன்னடத்தை அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே பாடசாலைகளுக்குச் செல்லாத மற்றும் இடைவிலகிய மாணவர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவ்வாறு அடையாளம் காணபப்பட்ட சிறுவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போதே நீதிவான் இந்த உத்தரவை வழங்கினார். இனம் காணப்பட்ட சிறுவர்களின் பெற்றோர்களுக்குக் கடுமையான எச்சரிக்கையும் மன்றினால் விடுக்கப்பட்டது. அத்துடன் சிறுவர் நிலையத்தில் வைத்து சிறுவர்களைப் பராமரிக்கமாறும் பெற்றோர்களுக்கு மன்று உத்தரவிட்டது. கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள மிகவும் பின்தங்கிய கிராமங்களில் பாடசாலைகளுக்குச் சல்லாத அல்லது இடைவிலகிய மாணவர்களின் தொகை அண்மைய நாள்களாக அதிகரித்து வருவதக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        