பல்கலை. கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில்
Thursday, March 31st, 2016
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அரசினால் வழங்கப்படும் கொடுப்பனவுகள் இதுவரை தமக்கு கிடைக்கப்பெறவில்லை என இலங்கை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் பல மாதங்களாக தெரிவித்து வந்ததாகவும் , கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் கடிதம் மூலம் அறிவித்ததாகவும் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.
எனினும் தமது கோரிக்கைளுக்கு எவரும் செவிசாய்க்கவில்லை என இலங்கை பல்கலைக்கழக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Related posts:
தாய்ப்பால்: உலக அளவில் முதலிடம் பிடித்த இலங்கை!
ஏப்ரல் 21 குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் ரிசாத் பதியுதீனின் சகோதரர் - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
மனித உரிமைகள் குறித்து பேசுவதற்கு முன்னர், மனிதன் ஒருவன் வாழும் உரிமையை உறுதிப்படுத்துவது முக்கியமாக...
|
|
|


