பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு வளாகத்திற்கு முன்பாக இன்று நண்பகல் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 27 மாணவர்கள் மீதான வகுப்புத்தடையை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுத்து மாணவர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக விஞ்ஞான மற்றும் முகாமைத்துவப் பீடங்களைச் சேர்ந்த 27 மாணவர்களுக்கு, பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறியமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருந்தது.
பல்கலைக்கழக நிர்வாகத்தினால் குறிப்பிட்ட மாணவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னரே தண்டனை விதிக்கப்பட்டதாக கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் குறிப்பிட்டது. ஆயினும், மாணவர்கள் மீதான வகுப்புத்தடை நியாயமற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
|
|