நாடு முழுவதும் கூகிள் பலூன் திட்டத்தின் ஊடாக 4G இணைப்பு?

Monday, October 3rd, 2016

நாடு முழுவதும் கூகிள் பலூன் திட்டத்தின் ஊடாக 4G இணைப்பை வழங்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக சமிஞ்சை வரம்பை இந்த வருடம் நவம்பர் மாதம் வரையில் விடுவிப்பதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அனைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்த திட்டத்தை செயற்படுத்துவதற்கு கூகிள் பலூன் பிரச்சினை காரணம் அல்ல எனவும், சமிக்ஞை வரம்பு ஒன்றை சட்ட ரீதியாக விடுவிப்பதற்கு சில காலங்கள் செலவிடப்பட்டமையினாலே தாமதமாகியுள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கைமய கூகிள் பலூன் திட்டத்தின் வேலைத்திட்டம் இந்த வருடத்தின் நவம்பர் மாதம் வரையில் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதேவேளை, இலவச Wi-Fi மண்டலங்களுக்கு ஏற்பட்டிருந்த அனைத்து தொழில்நுட்ப பிரச்சினைகளும் தற்போது வரையில் தீர்க்கப்பட்டுள்ள நிலையில் 2017ம் ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் 1500 Wi-Fi மண்டலங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த வருடத்தின் ஒக்டோம்பர் மாதம் வரையில் நாடு முழுவதும் 300 Wi-Fi மண்டலங்களையும் டிசம்பர் மாதம் வரையில் 500 Wi-Fi மண்டலங்ளையும் அமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

4glte_mast

Related posts: