பருவ மழை பொய்த்ததால் வயலுக்கு பவுஸர் தண்ணீர் பாச்சல்!

பருவ மழை இதுவரை பொய்யாத நிலையில் பவுஸர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி உழவு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர் தென்மாராட்சி நெற்செய்கையாளர்கள்.
உரிய நேரத்தில் மழை பெய்திருந்தால் ஜப்பசி மாதத்தில் களை பிடுங்கும் பணிகள் நடைபெறும். தற்போது ஜப்பசி மாதம் ஆரம்பித்துள்ளபோதும் இதுவரை மழை பெய்யவில்லை. மழையின் பின்னர் நெல் விதைப்புக்காக வரம்புகட்டல், உழவு போன்றவற்றை மேற்கொண்டு விதைப்புச் செய்ய போதிய அவகாசம் இருக்காது. அதனால் வயல்களுக்கு பவுஸர்கள் மூலம் தண்ணீர் பாய்ச்சி முற்கூட்டியே உழவு வேலைகளை ஆரம்பித்துள்ளோம். மழை பெய்தால் நெல் விதைப்பை உடனடியாகச் செய்யலாம். குடியிருப்புகளுக்கு அருகில் பாத்திகள் அமைத்து நெல் நாற்றுக்கள் போடப்பட்டுள்ளன. வயல்களில் நீர் பாய்ச்சி பசளையிடும் ஆயத்த வேலைகள் நடைபெறுகின்றன. – என்று விவசாயிகள் தெரிவித்தனர்.
Related posts:
பதிவு செய்யப்படாத தனியார் வைத்திய நிலையங்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை!
இரவு நேரப் பூங்காவாக மாறுகிறது.தெஹிவளை மிருகக்காட்சி சாலை!
3 இலட்சம் பீப்பாய் பெற்றோல் கொள்வனவுக்கான நாணயக் கடிதம் திறப்பு - நாளாந்த கேள்விக்கேற்ப பெற்றோல் டீச...
|
|