பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிப்பு!

பருத்தித்துறை கொட்டடி பகுதியில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் கஞ்சா கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இருவர் மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு தப்பித்துள்ளனர். 48 கிலோ 900 கிராம் கேரளக் கஞ்சா போதைப்பொருள், 2 மோட்டார் சைக்கிள்கள், படகு ஒன்று, அதற்கான வெளியிணைப்பு இயந்திரம் என்பவை மீட்கப்பட்டுள்ளன என்றும் கடற்படையினர் தெரிவித்தனர். சான்றுப்பொருள்கள் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
Related posts:
வரலாற்று பதிவான ஹர்த்தாலால் முடங்கிய இரத்தினபுரி!
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இரு மாணவரை இணைக்க பாடசாலை அதிபர் மறுப்பு என பெற்றோர் குற்றச்...
யாழ். குடாநாட்டின் இரு இடங்களில் நாளை மின்தடை !
|
|