கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இரு மாணவரை இணைக்க பாடசாலை அதிபர் மறுப்பு என  பெற்றோர் குற்றச்சாட்டு!

Wednesday, January 18th, 2017

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தில் இரு மாணவரை இணைக்க பாடசாலை அதிபர் மறுப்பு தெரிவிக்கின்றார் என்று பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மத்திய ஆரம்ப  வித்தியாலயத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் தரம் 6க்கு மத்திய மகா வித்தியாலயத்தில் பயில்வதே வழமை. எமது பிள்ளைகளின் புள்ளிகள் போதாது, வேறு பாடசாலைகளில் இணையுங்கள் என்று கூறப்படுகின்றது. வலயக் கல்வி அலுவலகம் சென்று பிரச்சினைகள் தொடர்பாக கதைத்த போது மாணவர்களை இணைக்கும் படி கடிதம் வழங்கப்பட்டது. அதைக் கொடுத்த போதும் அதிபர் இணைக்கவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களை பாடசாலை சேர்க்க முடியாமைக்கான காரணத்தை அறியத்தரும்படி பாடசாலை அதிபருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளோம். பதில் கிடைத்தவுடன் மேலதிக செயற்பாட்டு தொடர்பாக கூறமுடியும் என்று இது தொடர்பாக கிளிநொச்சி வலயக் கல்வி பணிப்பாளர் கே.முருகவேல் தெரிவித்துள்ளார். இந்தப் பாடசாலை தேசியப் பாடசாலை 70புள்ளிகளுக்கு குறைந்தவர்களை இணைப்பதில்லை இந்த மாணவர்கள் இருவரும் உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர்கள். அவர்களின் கிராமத்திற்கு அருகில் பாடசாலைகள் உள்ளன. அவற்றில் இணைக்கலாம் என்று பாடசாலை அதிபர் தெரிவித்துள்ளார்.

TamilDailyNews_4390789270402

Related posts: