பரவிப்பாஞ்சான் மக்களின் போராட்டம் தொடர்கிறது!

இராணுவம் வைத்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் நேற்று (13) ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டம், இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் தொடர்ச்சியாக பல போராட்டங்களை முன்னெடுத்து வந்ததோடு, பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ அதிகாரி மற்றும் அரசாங்க அதிபர் ஆகியோருக்கு மகஜரும் கையளித்திருந்தனர்.இதன் விளைவாக பிரதேசத்தின் ஒரு பகுதி காணிகளை மாத்திரம் விடுவிக்கப்பதாக, கடந்த மாதம் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் உறுதியளித்திருந்தார். எனினும், பரவிப்பாஞ்சானில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள சகல காணிகளையும் விடுவிக்குமாறு வலியுறுத்தியே மக்கள் நேற்றுமுதல் இத் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
நல்லூர் ஆலயச் சுற்றாடலில் வீடுகளில் நாய்களை வளர்ப்போர் கட்டிப் பராமரிக்குமாறு அறிவுரை!
வாக்களிப்பதற்கு தகுதியான வயதை அடைந்தவுடன் வாக்காளர் பதிவேட்டில் சேர்க்க நடவடிக்கை!
எரிபொருள் விலையை திருத்தம் இன்றி மார்ச் மாதத்தில் தக்கவைக்க அரசாங்கம் தீர்மானம்!
|
|