வாக்களிப்பதற்கு தகுதியான வயதை அடைந்தவுடன் வாக்காளர் பதிவேட்டில் சேர்க்க நடவடிக்கை!

Sunday, April 25th, 2021

18 வயதை எட்டியவர்கள் வாக்களிப்பதற்கான தகுதியான வயதை அடைந்தவுடன் அவர்களின் பெயர்களை வாக்காளர் பதிவேட்டில் சேர்க்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வாக்காளர்கள் பதிவுகள் ஆண்டுக்கு ஒரு முறைக்கு என்பதற்குப் பதிலாக ஆண்டுக்கு மூன்று முறை புதுப்பிக்கப்படும் என்ற நடைமுறையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான யோசனையை ஏற்கனவே பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

அதன்படி, எதிர்கால தேர்தல்களில் அதிக மக்கள் வாக்களிக்கத் தகுதி பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி பதினெட்டு வயதை எட்டிய இரண்டு வாரங்களுக்குள் அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் பதிவுகளைச் செய்ய முடியும். அதன்படி, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும், பதிவாளர் இந்த பணிகளுக்குத் தயாராவார்.

இதை தொடர்ந்து மூன்று மொழிகளில் வர்த்தமானி வெளியிடப்படும். இதன்போது எந்தவொரு ஆட்சேபனையும் பதிவாளர் எழுதுவதன் மூலம் பத்து நாட்களுக்குள் செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற யோசனையில் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: