பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள 23 பேரின் தண்டனையை தளர்த்த தீர்மானம்?
Wednesday, September 21st, 2016
நாட்டில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள 23 பேரின் தண்டனையை தளர்த்துவது தொடர்பில் சட்டமா அதிபருடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளதாக, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடலின் படி புனர்வாழ்வு ஆணையாளர் அலுவலகத்தின் ஊடாக இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய 23 கைதிகளையும் 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள 96 பேருக்கு எதிராக தற்போது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, அமைச்சர் சுவாமிநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:
சீனாவில் இடம்பெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்பும் யாழ். வர்த்தகர்களுக்கு...
உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்தார் துமிந்த சில்வா!
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம் தற்காலிகமாக மூடப்பட்டது!
|
|
|


