பன்றிக்காய்ச்சல் தொற்று அபாயம் மருத்துவ ஆய்வுக்கு தினமும் 2,000பேரின் குருதி!

Monday, March 6th, 2017

பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்த் தொற்றுகளுக்கு எவராவது உள்ளாகியிருக்கின்றனரா என்று ஒரு மருத்துவ மனையிலிருந்து தலா 10 பேரின் குருதி மாதிரிகளை மட்டுமே ஒரு மாதத்தில் பரிசோதிக்க முடியும். அவ்வாறு ஆராய்ச்சிப் பிரிவுக்குத் தினம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குருதி மாதிரிகள் அனுப்பப்படுகின்றன.

இவ்வாறு அறிவுறுத்தல் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதனால் பன்றிக்காய்ச்சல் உட்பட நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் மருத்துவ அறிக்கை உடனடியாகக் கிடைக்காது என்று சுகாதாரத் திணைக்களத்தினர்  தெரிவித்துள்ளனர். பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்.1என்.1 என்று இன்புளுவேன்சா வைரஸ் தாக்கம் மற்றும் டெங்கு உள்ளிட்ட நோய்த் தொற்றுகளின் பரிசோதனைக்காக நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளிலும் இருந்தும் தினமும் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட குருதி மாதிரிகள் மருத்துவ ஆராய்சிப் பிரிவுக்கு அனுப்பப்படுகின்றன.

அதனால் அனுப்பப்படும் மாதிரிகளின் அறிக்கை கிடைப்பதற்கு 4 நாட்கள் வரையில் காலதாமதமாகின்றதா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் என்று அழைக்கப்படும் எச்.1என்.1 என்று இன்புளுவேன்சா வைரஸால் பீடிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வடக்கில் இதுவரை சுமார் 30பேர் வரையில்தான் என்று மருத்துவ அதிகாரிகள் தகவல் வெளிப்படுத்துகின்றனர். இந்தத் தொற்றுக்கு உள்ளாகியிருப்பார் என்ற சந்தேகத்தில் ஏராளமானவர்கள் வந்தாலும் உறுதிப்படுத்தப்பட்டவர்கள் குறைவுதான் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related posts: