பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மின்சார தடை இல்லை!
Wednesday, March 30th, 2016
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கப்படும் என பிரதி மின்வலு அமைச்சர் அஜித் பெரேரா தெரவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கூறுகையில் –
பண்டிகைக் காலத்தில் 24 மணித்தியாலங்களும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த நாட்களில் இடம்பெற்ற துரதிஸ்டவசமான சம்பவங்களினால் மின்சாரத்தை சேமிக்கும் நீண்ட கால திட்டமொன்று முன்னெடுக்கப் படவுள்ளது.இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க அமைச்சரவையில் பத்திரமொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Related posts:
"சைலன்ஸ் இன் த கோட்" திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவு!
75 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய சிகரெட் பொதிகள் சுங்க பிரிவினரால் மீட்பு!
கிழக்கில் எவ்வித அபிவிருத்தியும் இடம்பெறவில்லை – பிரதமர்
|
|
|


