“சைலன்ஸ் இன் த கோட்” திரைப்படத்திற்கு இடைக்காலத் தடை உத்தரவு!

Thursday, October 6th, 2016

இரு பெண்கள் நீதிபதி ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு பிரசன்ன விதானகேவினால் தயாரிக்கப்பட்ட சைலன்ஸ் இன் த கோட் (Silence in the Courts) என்ற ஆவணத் திரைப்படத்தை  வெளியிட, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த ஆவணத் திரைப்படத்தின் மூலம் தான் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக இயக்குனர் கூற முற்பட்டுள்ளதாகவும், நாளை குறித்த திரைப்படத்தை காட்சிப்படுத்தத் தயாராகி வருவதாகவும், முன்னாள் நீதியரசர் லெனின் ரத்நாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்படி படம் வெளியானதால் தனக்கு மட்டுமல்லாது இலங்கை நீதித்துறை கட்டமைப்புக்கே பாரிய அவமதிப்பு ஏற்படும் எனக் கூறியுள்ள அவர், இதனை வெளியிட இடைக்காலத் தடை விதிப்பதோடு, நிரந்தரமான தடைக்காக நோட்டீஸ் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார்.

விடயங்களை ஆராய்ந்த நீதவான் குறித்த ஆவணத் திரைப்படத்தை வெளியிட, எதிர்வரும் 19ம் திகதி வரை இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

1-6

Related posts: