பட்டப்பகலில் வீட்டில் இருந்த 16 பவுண் நகை கொள்ளை!
Thursday, June 14th, 2018
வடமராட்சியில் பகல் வேளையில் வீடொன்றுக்குள் புகுந்த திருடர்கள் 16 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கரணவாய் மத்தி பாடசாலை வீதியில் உள்ள சதானந்தமூர்த்தி என்பவரின் வீட்டில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் உள்ள அனைவரும் வேலைக்குச் சென்றிருந்த சமயம் மூதாட்டி ஒருவரே அங்கு தங்கியிருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய திருடர்கள் வீட்டுக்குள் புகுந்து சங்கிலி, காப்புகள், நெக்லஸ், மோதிரம் உள்ளிட்ட 16 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக நெல்லியடிப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
அரசஊழியர்களுக்கான தடுப்பூசிக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது - அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோ...
நாளாந்தம் ஒரு சிறுமியாவது துஷ்பிரயோகத்துக்குள்ளாகும் நிலை காணப்படுகிறது - சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியச...
50 ஆவது ஆண்டுகள் பூர்த்தி - யாழ். நாகதீப ரஜ மகா விகாரை விகாராதிபதிக்கு கௌரவிப்பு!
|
|
|


