கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு சீனா பயணிக்கிறார் அமைச்சர் அலி சப்ரி !

Sunday, June 18th, 2023

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடன் மறுசீரமைப்புச் செயன்முறைக்கு அவசியமான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து, விசேட பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அடுத்த வாரம் சீனா செல்லவுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புச் செயன்முறையை பூர்த்திசெய்யவேண்டியுள்ள நிலையில், அதில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோதே அமைச்சர் அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெறவுள்ள பொருளாதார கூட்டமொன்றில் பங்கேற்குமாறு தமக்கு சீன அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பிரகாரம் அடுத்த வாரம் அங்கு செல்லவுள்ளதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இருதரப்பு விடயங்கள் குறித்துப் பேசுவதற்காக அழைப்புவிடுக்கப்பட்டுள் நிலையில் இந்த விஜயத்தின் போது, கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விசேடமாக பேசவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

கடல் வளத்தினைப் பாதுகாக்கும் பண்பாட்டினை மறந்து விடக்கூடாது: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்!
வடக்கு மக்களின் சாட்சியங்கள் பரிந்துரைகளுடன் - மனித உரிமைகள் தொடர்பான ஆணைக்குழுவின் 2 ஆவது இடைக்கால ...
அமைச்சரவை பத்திரங்களை முறையாக தயாரிப்பதற்கான தகவல்களை வழங்குவது அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களின் பொறு...