நோயாளியின் மோதிரம் வைத்தியசாலை மாயம்!

Sunday, July 17th, 2016

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வயோதிப் பெண்ணின் 1 பவுண் எடையுள்ள இரண்டு மோதிரங்கள், வைத்தியசாலையில் கடமையாற்றும் சிற்றூழியரால் சனிக்கிழமை (16) மாலை அபகரிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த முதிய பெண்மணி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

மூளையில் ஒருவித கட்டியுள்ளதால் அவரை ஸ்கானிங் செய்வதற்கு கூட்டி சென்ற சிற்றூழியர், தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என சொல்லி கையில் இருந்த இரண்டு மோதிரங்களை பெற்றுக்கொண்டார்.

மயக்கம் தெளிந்து வெளியில் வந்த வயோதிப் பெண்ணிடம், மோதிரம் பற்றி உறவினர்கள் வினவியபோது, வைத்தியசாலையின் சிற்றூழியர் ஒருவர் தனது மோதிரத்தைப் பெற்றுக்கொண்டமை குறித்து தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே பொலிஸ் நிலையத்தில் இது குறித்தான முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts: