நீர் நஞ்சானதால் விவசாயி வைத்தியசாலையில்!

Monday, July 4th, 2016

திருகோணமலை கந்தளாயில் நஞ்சு கலந்த நீரினை பருகிய விவசாயி ஒருவர் மயக்கமுற்ற நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் கூறுகின்றன.

கந்தளாய், நான்காம் குலனி, பகுதியைச் சேர்ந்த பி.குலசேகர வயது 53 என்பவரே நஞ்சு கலந்த நீரினை பருகியதால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது,

நேற்று (03) மாலையில் குறித்த நபர் தனது வயலுக்கு நஞ்சு கலந்த எண்ணெய் விசிறுவதற்காக வயலுக்குச் சென்று, எண்ணெய் விசிறி விட்டு வாய்க்காலில் ஓடிய நீரினை பருகியுள்ளார். பின்பு அரை மணித்தியாலயத்தின் பின்னர் திடீரென மயக்கமுற்று விழுந்ததால் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குறித்த நபரின் வீட்டக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வாய்க்காலில் நஞ்சு திட்டமிட்டு கலந்து விடப்பட்டுள்ளதா? அல்லது நஞ்சு கலந்த எண்ணெய் உபகரணத்தினை கழுவிய போது நீரில் நஞ்சு கலந்துள்ளதா? போன்ற விசாரணைகளை கந்தளாய் வைத்தியசாலைப் பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படகின்றது.

Related posts: