நீர்வேலி பிரதேசத்தில் கால்நடை திருட்டு அதிகரிப்பு!

நீர்வேலி பிரதேசத்தில் கால்நடை திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு. இரவுமற்றும் பட்டப்பகல் வேளைகளில் திருட்டுக்கள் இடம்பெறுகின்றன.
கடந்த வியாழக்கிழமை நீர்வேலி தெற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் கட்டப்பட்டிருந்த இரண்டு மறி ஆடுகளும் அதன் இரண்டு குட்டிகளும் களவாடப்பட்டுள்ளன.
வீட்டின் பின்பக்கத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளைத் திருடர்கள் மிகவும் தந்திரமாகக் களவாடிச் சென்றுள்ளனர்.
நீர்வேலி, கோப்பாய் பிரதேசங்களில் அண்மைக் காலமாக கால்நடைகளின் திருட்டுக்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக விவசாய நிலங்களில் மேய்ச்சலுக்காகக்
கட்டப்படும் கால் நடைகளும் இவ்வாறு களவாடப்பட்டு வருகின்றன என்று பிரதேச மக்கள் தெரிவித்தனர்.
Related posts:
பொது இடங்களில் தீ மூட்டுவதற்குத் தடை மீறுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை முல்லை மாவட்ட பொலிஸ் அத்த...
யாழ் மாவட்ட வீட்டுத்திட்டம் தொடர்பான இறுதிப்பட்டியல் எதிர்வரும் 19 ஆம் திகதி வெளியிடப்படும் – மாவட்ட...
பேருந்துகளுக்கான தண்டப்பணம் 5 இலட்சம் வரை உயரும் - அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை!
|
|