எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்தியுங்கள் – இலங்கை வங்குரோத்து நிலைக்கும் செல்லாது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, December 21st, 2021

சஜித் பிரேமதாச மற்றும் திஸாநாயக்க நினைப்பது போல எமது நாட்டை வங்குரோத்து நிலைக்கு செல்ல இடமளிக்க மாட்டோம் என தெரிவித்துள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ எதிர்மறையாக சிந்திக்காமல் நேர்மறையாக சிந்தித்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் – டொலர் பிரச்சினை தற்காலிக பிரச்சினை என்றும், இந்தப் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்று கூறுகிறீர்கள். ஆனால் மக்கள் மிகவும் பரிதாபத்திற்கு ஆளாகியுள்ளனர். எல்லாவற்றிற்கும் வரிசை யுகம் உருவாகுமா? என செய்தியாளர் எழுப்பியய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் –

“கொவிட் நெருக்கடி முடிந்தாலும் இந்த வரிசை யுகம் முன்னைய அரசாங்க காலத்திலும் காணப்பட்டது. எண்ணெய் பவுசர் வரும்வரை நம் நாட்டு மக்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று. எரிவாயு பெற வரிசைகள் இருந்தன.

சவால் இருக்கிறது என்பது அறிவாளிகளுக்குத் தெரியும். வெளிநாட்டில் இருந்து வந்த பணம் வழக்கம் போல் வரவில்லை.

வரக்கூடிய பணத்தில் சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. இல்லையெனில் இதுபோன்ற சவால்களை சந்திக்க மாட்டோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


பிளாஸ்ரிக் பொருட்களுக்கு வருகிறது தடை – விரைவில் வர்த்தமானி அறிவிப்பு வெளிவரும் என அமைச்சர் மஹிந்த அ...
தொடரும் மோசமான வானிலை: ஆறு பேர் உயிரிழப்பு - இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை அவதான நில...
இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கான தளமாக இலங்கையை பயன்படுத்த எவரும் அனுமதி கிடையாது - வெளிவிவக...