நீர்வேலியில்  சட்ட விரோத மின்சாரம் பெற்ற குற்றச் சாட்டில் கைதான சந்தேகநபர்களை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் செல்ல அனுமதி

Thursday, March 17th, 2016

யாழ். நீர்வேலிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்று வந்த குற்றச் சாட்டில் கடந்த திங்கட்கிழமை கைதான சந்தேக நபர்கள்  மூவரையும் சுமார்-50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஆட்பிணையில் செல்ல நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை (15-03-2016) மல்லாகம் மாவட்ட நீதவான் ரி. கருணாகரன் உத்தரவிட்டதுடன் மூவருக்கும் எதிரான வழக்கை ஏப்ரல் மாதம்-25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தும் தீர்ப்பளித்தார்.

கொழும்பிலிருந்து வருகை தந்த மின்சார சபையின் புலனாய்வு அதிகாரிகளும், அச்சுவேலிப் பொலிஸாரும் இணைந்து நடாத்திய திடீர்ச்  சுற்றி வளைப்பின்   போது சட்ட விரோத மின்சாரம் பெற்று வந்த மூவர் கைது செய்யப்பட்ட நிலையில் சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: