கோரமின்மை – நாடாளுமன்ற அமர்வு நாளை வரை பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவினால் ஒத்திவைப்பு!

Sunday, December 10th, 2023

கோரம் இல்லாத காரணத்தினால் நாடாளுமன்ற அமர்வு நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்

சபை அமர்வை கொண்டுசெல்ல வேண்டுமென்றால் குறைந்தபட்சம் 15 உறுப்பினர்கள் சபையில் இருக்க வேண்டும்.

வற் வரி திருத்தச்சட்டமூலம் மீது விவாதம் நடத்தி அதனை நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டிருந்த நிலையில், சபையை கொண்டுசெல்ல உறுப்பினர்களின் எண்ணிகை போதாதென எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் கோரம் ஒலிக்கப்பட்டது.

என்றாலும், சபை அமர்வில் பங்குபற்ற எவரும் வராததால் சபையை நாளை காலை 9.30 மணிவரை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

முன்பதாக பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்றுகாலை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, வெட் வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட 138 பொருட்களில் 97 பொருட்களுக்கு வெட் வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டார்.

மருந்துகள், ஊனமுற்றோர் உபகரணங்கள், அரிசி மாவு, கோதுமை மா, காய்கறிகள், பழங்கள், திரவ பால் மற்றும் எம்புலன்ஸ் சேவை ஆகியவற்றுக்கு வெட் வரி அறவிடப்பட மாட்டாது எனவும் தெரிவித்திருந்தார்.

மேலும் கையடக்க தொலைபேசி குறுஞ்செய்திகளுக்கு மேலதிகமாக நிலையான தொலைபேசிகள் மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கும் வரி அறவிடப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.

அத்துடன் அரச வருவாயை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இந்த வரி அறவிடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: