நீர்க்கட்டணம் மீண்டும் உயரும் சாத்தியம்?
Friday, November 18th, 2016
ஒருசில சதவீதத்தினால் நீர்க்கட்டணம் உயர்த்தப்பட வேண்டிய அவசிய தேவையில் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பிரனாந்துபுள்ள தெரிவித்துள்ளார்.
மூன்று வருடத்திற்கு ஒருமுறை நீர்க்கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
எவ்வாறாயினும், பொதுமக்களின் அசௌகரியங்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு ஒருசில வீதங்களால் நீர்க்கட்டண திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், நீர்க்கட்டண உயர்வுக்கும் 2017ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர், சுதர்ஷனி பிரனாந்துபுள்ள கூறியுள்ளார்.
டிசம்பர் முதலாம் திகதி முதல் நீர்க்கட்டணங்கள் 30% இனால் உயர்வடையும் என முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய நீர்க்கட்டண உயர்வு தற்காலிகமாக இடைநிறுத்தபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:
|
|
|


