ஆங்கில சிங்கள மொழிகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி நெறி !

Tuesday, March 27th, 2018

ஆரம்ப் பிரிவில் ஆங்கில மொழி சிங்கள மொழி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி இரண்டாம் தவணை அரம்பத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் சந்திரராஜா தெரிவித்துள்ளார்.

பயிற்சி நெறி ஆரம்பமாவது தொடர்பாக கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில் அரம்பப் பிரிவில்  மேற்படி பாடநெறிகளை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவும் காரணத்தால் அக் குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் 36 மணித்தியாலங்களைக் கொண்ட வகையில் இப் பயிற்சி இடம் பெறவுள்ளது பாட நெறியில் தேர்ச்சி பெற்ற வலயத்தில் உள்ள வளங்களை கொண்டு பாடக் குறிப்புக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன வகுப்பு  ரீதியாக கட்டம் கட்டமாக இப் பயிற்சி நெறி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

வலயக் கல்வி பணிப்பாளரின் வழி காட்டல் காலங்களில் எஸ்.செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டு மாணவர்களது பரீட்சை பெறுபேற்றில் மாற்றம் ஏற்படுத்தப்பட்ட நிலையில் தொடர்ந்தும் அச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற வேளையில் மாணவர்களது மொழித் தேர்ச்சியை வளர்த்தெடுக்கும் வகையிலும் எழுத்து – வாசிப்பு செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது இது மாணவர்களுக்கு பயனுள்ளதாகவும் அவர்களது மொழித் தேர்ச்சியை வளர்ப்பதற்கும் உதவுவதாகவும் பலரும் குறிப்பிடுகின்றனர்.

இத்தகைய செயற்றிட்டங்களின் தொடர்ச்சியாக ஆங்கில பிரிவு ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி ,சிங்கள மொழி பயிற்சிநெறிகள் ஆரம்பிக்கப்படவள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் மொழித் தேர்ச்சியானது வளர்த்தெடுக்கப்பட வேண்டிய நிலையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதன் ஊடாக மாணவர்களது மொழி வளத்தைப் வளர்ப்பதற்கும் இச் செயற்றிட்டம் உறுதுணையாக அமையும் .

Related posts: