நாளையும் மழை தொடரும்? – வளிமண்டல திணைக்களம்

நாட்டின் மேல், வடமேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் காலைவேளைகளில் மழைபெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட மாகாணங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியமுள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மழைபெய்யும் அதேவேளை, நாட்டின் மத்திய மலைநாட்டின் மேற்குப்பகுதியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் காற்று பலமாக வீசுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இலங்கையில் முதலீடு செய்கிறது உலகின் பிரபல்யமான அலிபாபா நிறுவனம்!
குடாநாட்டில் பால்வெண்டிச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்!
உள்ளூராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை நிரந்தரமாக்குவதற்கு உடனடி நடவடிக்கை - அமைச்சர் ஜனக ...
|
|