இலங்கையில் முதலீடு செய்கிறது உலகின் பிரபல்யமான அலிபாபா நிறுவனம்!

Friday, January 20th, 2017

உலகில் பிரபல்யமான சீனாவின் அலிபாபா நிறுவனம், இ-வணிகத் துறையில் இலங்கைக்கு முதலீடு செய்ய தயாரகவுள்ளது என இலங்கையின் நிதி அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

புகழ்பெற்ற இணையவழி வணிகத்தளங்களின் குழுமமான அலிபாபா குழுமத்தின் செயல் தலைவரான ஜாக் மா மற்றும் இலங்கை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜாக்மா இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,இலங்கையில் ஆன்லைன் (online )வணிக நிறுவனங்களை ஊக்குவிப்பது தொடர்பிலும் அலிபாபா குழுமத்தின் செயல் தலைவரான ஜாக் மா கூறியுள்ளார். கடந்த 18 ஆம் திகதி, சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்ற உலக பொருளாதார மாநாட்டில் வைத்து அலிபாபா நிறுவன தலைவர் ஜாக் மா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு முதலீடு செய்வது தொடர்பில் விரைவில் நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக அலிபாபா நிறுவன நிறுவர் ஜாக் மா தெரிவித்துள்ளார் என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.சீனாவிலேயே இரண்டாவது பணக்காரர் என்ற பெயருக்குரிய ஜாக் மா, ஃபோர்ப்ஸ் இதழின் முகப்புப் பக்கத்தில் இடம் பெற்ற முதல் சீன பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது.

cow3

Related posts: