பொருளாதார நடவடிக்கை செயலணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் கொள்கை ரீதியான வட்டி வீதம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Thursday, May 7th, 2020

பொருளாதார நடவடிக்கை செயலணிக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இலங்கை மத்திய வங்கி கொள்கை ரீதியான வட்டி வீதத்தை மீண்டும் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை விசேட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது..

அதன்படி, இலங்கை மத்திய வங்கி நேற்றுமுதல் நடைமுறைக்கு வரும் வகையில் நிலையான வைப்பு வீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

குறைந்த பணவீக்க நிலைமைகளின் போது கொவிட் 19 தொற்று நோயினால் ஏற்பட்டுள்ள பொருளாதார தாக்கத்தை சமாளிக்க பொருளாதாரத்திற்கு மேலும் ஒத்துழைப்பு தேவை என்பதை கருத்தில் கொண்டு நாணய சபையால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், பணவியல் கொள்கை மற்றும் பண நிலைமைகளை எளிதாக்குவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு ஏற்ப, சந்தைக் கடன் விகிதங்கள் குறையவில்லை என நாணய சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, வட்டி விகிதங்களை மேலும் தாமதமின்றி குறைக்க நிதி நிறுவனங்களை வலியுறுத்துவதாகவும், இல்லையென்றால் வட்டி விகிதங்களைக் குறைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts: