நாளைமுதல் பொலித்தீன் பாவனைக்கு தடை – சுற்றுச்சூழல் அமைச்சு அறிவிப்பு!

Tuesday, March 30th, 2021

நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு நாளைமுதல் உற்பத்தி தடையை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் அமைச்சு மேலும் குறிப்பிடுகையில் –

ஒரு தடைவ மாத்திரம் பாவித்து வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தியான பெட் போத்தலுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.

அதேபோன்று 20 மைக்ரோ கிராமுக்கு குறைவான லஞ் சீட், உணவு மற்றும் மருந்து அல்லாத கொட்டன் பட், வைத்திய தேவைக்காக பயன்படுத்தப்படாத மற்றும் காற்று நிரப்பக்கூடிய பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களும் தடை செய்யப்படவுள்ளன.

நிறுவனங்கள் பல முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மேற்படி பொருட்களை நாளைமுதல் தடை செய்வதாக சுற்றுச்சூழல் அமைச்சர் நேற்று (நடத்திய ஊடகச் சந்திப்பில் தெரிவித்திருந்தார்

அத்துடன் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்களின் விற்பனை கருதி மூன்று மாத காலத்தை சலுகை காலமாக வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: