நானுஓயா வனப்பகுதியில் தீப்பரவல் – 3 ஏக்கர் நாசம்

Monday, April 4th, 2016

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா எடின்புரோ தோட்டப்பகுதியில் உள்ள மானாபுல் வனப்பகுதியில் 03.04.2016 அன்று மாலை 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது.

ஆறு ஏக்கரைக் கொண்ட இந்த “மானாபுல்” வனப்பகுதியின் 3 ஏக்கர் வரை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நானுஓயா பொலிஸாரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு மத்தியில் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர்.

இந்த பகுதியில் சிறுவர்கள் விளையாட்டு தனமாக தீ வைத்ததன் காரணமாக இந்த தீச் சம்பவம் இடம்பெற்றதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ விபத்து சம்மந்தமான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts:

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை குற்றிகள் கைதடியில் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்பு!
சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் மீண்டும் ஆரம்பிக்கப...
அடிப்படை தேவைகளை தெரிவிப்பதற்கான சந்தர்ப்பத்தை பெண்களுக்கு வழங்க வேண்டும். - யாழ் பல்கலைக்கழகத்தில் ...