நானுஓயாவில் மண்சரிவினால் ஒரு வீடு முற்றாக சேதம்: 60பேர் வெளியேற்றம்!

Thursday, June 1st, 2017

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாரண்டன் தோட்டத்தில் நேற்று ஏற்பட்ட மண்சரிவில் வீடொன்று முற்றாக சேதமாகியுள்ளதுடன், ஒரு லயன் குடியிருப்பை சேர்ந்த 60பேர் வரை இடம்பெயர்ந்துள்ளனர்.

குறித்த லயன் குடியிருப்பில் 12 குடும்பங்கள் உள்ளதாகவும், மீண்டும் மண்மேடு சரிந்து விழும் அபாயம் நிலவுவதனால் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தோட்ட வெளிகள உத்தியோகத்தர் வீடுகளிலும் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. கடந்த சில தினங்களாக நாடளாவிய ரீதியில் பெய்துவரும் அடைமழையினால் பேரழிவுகள் ஏற்பட்டுள்ள நிலையில், நுவரெலியா மாவட்டத்தில் தற்போது அதிக காற்றுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இந்தியாவின் 74 ஆவது குடியரசுதினம் இன்று - யாழ்ப்பாணத்திலும் இந்திய துணைத்தூதரகத்தில் விசேட நிகழ்வுகள...
கொழும்பு செல்லும் புகையிரதத்தைக் கடப்பதில் ஏற்படும் தாமதமே யாழ் ராணி மாலையில் தாமதிக்கின்றது - அனுரா...
இணைய பாதுகாப்பு சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானம் - சட்டமா அதிபர் உயர் நீதிமன...