நாட்டில் 23,000 கணித,விஞ்ஞான,ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை – அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார!

Thursday, October 20th, 2016

இன்று எமது நாட்டில் உள்ள குடும்பங்களுக்கு அதிக செலவாக அமைவது, குழந்தைகளின் கல்விக்கான செலவாகும். அதற்கான காரணம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இயங்கும் பிரபல பாடசாலைகளில் தமது பிள்ளைகளை சேர்ப்பதாகும். அதற்கான காரணம் அங்குள்ள வளங்களாகும். அதற்காக முயல்வது பிழையல்ல. ஏனென்றால் இன்னும் இந்த நாட்டிலுள்ள பாடசாலைகளில் 23,000 கணித, விஞ்ஞான, ஆங்கில பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. இந்நிலமையை மாற்றுவதற்காக அரசு 5000 ஆசிரிய நியமனங்களை வழங்குவதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டது என அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

“இந்த அரசின் கீழே நாங்கள் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு பிரதேச செயலாளர் பிரிவிலிருந்து 2 பாடசாலைகள் வீதம் தெரிவு செய்து அபிவிருத்தி செய்யவிருக்கின்றோம். அத்துடன் மொனராகலை மாவட்டத்தில் 121 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளின் அளவுக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மாளிகா தன்னை மகாவித்தியாலயமும் அதில் ஒன்று இந்த வருடத்திற்காக மாத்திரம் நாங்கள் 548 இலட்சம் ரூபாவினை இப்பாடசாலைக்கு ஒதுக்கியுள்ளோம்.

எங்களுடைய நோக்கம், கல்விமான்களால் நிறைந்த தேசமொன்றை உருவாக்குவதாகும்” என அமைச்சர் மேலும் தெரிவித்தார். கடந்த 10ஆம் திகதி படல்கும்புறை, மாளிகாதன்னை மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

68375c8b-4833-4970-a7ed-7ce7c7c3bf76

Related posts: