நாட்டில் நேற்றைய தினம் 150 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி!

Thursday, April 13th, 2017

நாட்டின் பல பிரதேசங்களில் நேற்று  150 மில்லி மீற்றருக்கு மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அருகாமையில் தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதனால் இடைக்கால பருவப்பெயர்ச்சி மழை பெய்யக்கூடிய சந்தர்ப்பம் அதிகரித்திருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாலை வேளைகளிலும் இரவு நேரத்திலும் இந்த நிலைமை எதிர்வரும் 15ம் திகதி வரை நீடிக்கும்.

இந்த நிலைமை காரணமாக மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையிலான ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்றிரவு பல பிரதேசங்களில் மழையுடன் காற்றும் வீசியதனால் வீடுகள் பலவற்றுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மெதிரிகிரிய மற்றும் அம்பலாந்தொட்ட பிரதேசங்களில் வீசிய காற்று காரணமாக 12 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அம்பலாங்கொட கொக்கல பிரதேசத்தில் மின்சார கட்டமைப்பிற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related posts: