இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை திரட்டும் நபரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிப்பு!

Saturday, June 17th, 2017

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து ஆட்களை அனுப்புபவர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒருவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்துள்ளது

அமெரிக்காவின் இந்த அறிவித்தலுக்குள் வந்த முதலாவது இந்திய தீவிரவாத அமைப்பின் தலைவராக மொஹமட் ஸாபி ஆர்மார் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

அவர், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்காக குறித்த மூன்று நாடுகளில் இருந்தும் ஆட்களை திரட்டும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்

சர்வதேச காவல்துறையினரின் பிடியாணைக்கு உள்ளாகியுள்ள அவர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவராவார்

சொட் மௌலா, அஞ்சன் பாய் மற்றும் யூசுப் அல் ஹிந்தி ஆகிய பெயர்களில் அவர் அழைக்கப்படும் அவர், தற்போது பாகிஸ்தானில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts:

இரணைதீவு மக்கள் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் – வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன்
அலுவலக மற்றும் பாடசாலைகளுக்காக நாளைமுதல் புதிய போக்குவரத்து சேவைகள் முன்னெடுப்பு - அமைச்சர் பந்துல ...
இலங்கை சாரதி அனுமதிப்பத்திரத்தை பிரித்தானியாவில் பயன்படுத்த அனுமதி - மோட்டார் வாகன திணைக்களம் தெரிவி...

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்காக நாணயக் கடிதத்தை விடுவிக்கத் தீர்மானம் - சுகாதார அமைச்சர் சன்ன ஜ...
வறட்சியான காலநிலையால் இதுவரை 2 இலட்சத்து 48 ஆயிரத்து 531 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்தியந...
“அடுத்த தசாப்தத்திற்கு ஏற்றவாறு இராணுவத்தை தயார்படுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப...