நாட்டில் நிலவும் வறட்சியால் 41/2 இலட்சம் பேர் பாதிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் நிலவி வரும் வறட்சியான காலநிலையினால் சுமார் 41ஃ2 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வட மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் 75 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் நிலவிய வறட்சியினால் 9 மாவட்டங்களில் 1,34,165 குடும்பங்களைச் சேர்ந்த 4,36,658 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது புத்தளம் மாவட்டத்தில் 2,16,670 பேரும் களுத்துறையில் 1,08,077 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கண்டியில் 1856 பேரும், அநுராதபுரத்தில் 11,315 பேரும் பொலனறுவையில் 990 பேரும் இரத்தினபுரியில் 25 பேரும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் மன்னாரில் 83,163 பேரும் முல்லைத்தீவில் 10,005 பேரும் வவுனியாவில் 4557 பேருமாக மொத்தமாக 97,725 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related posts:
137 ஆண்டுகளுக்குப் பின் காலநிலையில் மாற்றம் - நாசா
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் - வலி.மேற்கில் 80 வீடுகள் அமைக்கப்படவுள்ளன!
புதிதாக பரவிவரும் பிரித்தானிய வைரஸே இலங்கையில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரிப்புக்கு காரணம் - இராணுவத...
|
|