நாட்டில் டெங்கு தொற்று நோயாளர்கள் அதிகரிப்பு!

Sunday, October 30th, 2016

கடந்த வருடத்தை விட 2016ஆம் ஆண்டு இலங்கையில் 44 ஆயிரத்து 171 பேர் டெங்கு நோயாலர்கள் என இனங்காணப்பட்டுள்ளதாதொற்று நோய் தடுப்பு பிக ரிவு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில்,2015ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 327 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்படிருந்தனர் என இனங்காணப்பட்டுள்ளதாகவும் ஒப்பீட்டளவில் இந்த வருடத்தில் 20 ஆயிரத்து 844ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

மேலும், கொழும்பு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 730 பேர் டெங்கு நோயாளர்கள் உள்ளனர் எனவும் இந்த மாவட்டத்திலேயே அதிக படியான டெங்கு தொற்று நோயாளர்கள் காணப்படுவதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.கடந்த ஜீலை மாதத்திலேயே அதிகபடியாக டெங்கு தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.குறித்த காலப்பகுதியில் 10ஆயிரத்து 636 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை,நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வரும்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிக்கலாம் என டெங்கு தொற்று நோய் தடுப்பு பிரிவின் அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1-20-1466406742

Related posts:


மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்புக்கு முரணானது இல்லை - உயர்நீதிமன்...
மன்னாரை வலுசக்தி மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை - செப்டம்பர் 15 முதல் தலைமன்னார் - கொழும்...
தேவைப்பட்டால் வெளிநாட்டு விமானிகளை பணிக்கு அமர்த்துவதற்கான அனுமதியை அரசாங்கத்திடமிருந்து பெற்றது ஸ்ர...