நாடு இயல்பு நிலைக்கு திரும்பியபோதும் பணிகளுக்கு செல்வோர் போக்குவரத்து வசதிகள் இன்றி பெரும் அவஷ்தை!

Monday, May 11th, 2020

வெளி மாவட்டங்களில் இருந்து பணிகளுக்காக கொழும்பு பிரவேசிப்போருக்கு போதியளவான போக்குவரத்து வசதிகள் கிடைக்கப்பெறவில்லை என பணிகளுக்கு செல்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

போக்குவரத்து சேவைகளுக்காக இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகள் பயன்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும் தாம் பல மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் பேருந்துகளுக்காக காத்திருப்பதாக பணிகளுக்கு செல்வோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது.

எனினும் கொழும்பு மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய சேவைகளுக்காக அரசாங்க மற்றும் தனியார் துறை பணியாளர்கள் சேவைகளில்; ஈடுபட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

இந்நிலையில் போக்குவரத்து சேவைகள் போதியளவு இடம்பெறாததால் பணிகளுக்கு செல்வோர் பேருந்துகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts: