நாடுமுழுவதம் உள்ள பற்சிகிச்சை நிலையங்களுக்கு பல மில்லியன் செலவில் உபகரணங்கள்!

நாடு முழுதும் உள்ள அரச பற்சிகிச்சை நிலையங்களுக்கு 360 மில்லியன் செலவில் உபகரணங்கள் பெற்றுக்கொடுப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வருடம் இந்த உபகரணங்கள் வழங்கி வைப்பதன் பொருட்டு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கமைய எக்ஸ்ரே இயந்திரங்கள், இரசாயன பொருட்கள் உள்ளிட்டவைகள் குறித்த பற்சிகிச்சை நிலையங்களுக்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், சகல வைத்தியசாலைகளிலும் பூரண வாய்சுகாதார மத்திய நிலையங்கள் அமைப்பதற்கு 3000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கமைய கராப்பிட்டிய மற்றும் இரத்தினபுரி வைத்தியசாலைகளில் முதலாவது வாய்ச் சுகாதார மத்திய நிலையம் அடுத்த வருடம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்..
Related posts:
எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
யாழில் முடக்கப்பட்டுள்ள பகுதிகள் தொடர்பில் இரு வாரங்களின் பின்னரே முடிவெடுக்கப்படும் – மாகாண சுகாதார...
இலங்கை - அவுஸ்திரேலிய நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவு!
|
|